உவமேயம்

அவளின் சுவையை வர்ணிக்க ஆசைபட்டது தவறோ?
பூண்டு பரல்களில் கடுகு நட்டத்தை போல இரு கண்கள்,
குடைமிளகாயை குடைந்தது போல் ஒரு வள்ளிய மூக்கு,
அதிலே கிராம்பு மினுக்கும் அவள் தும்முகையில்,
வெட்கப்படும் அழகை காட்டிகொடுக்கும் வெட்டிய தக்காளி காது,
வாழைப்பூ வர்ணமும் தாழம்பூ வாசமும் கொண்ட கன்னம்,
வெண்டை பிஞ்சின் தோலை போல் முளைத்த மீசை பிரமாதம்,
சிதற விட்ட கடுகை போல் நீ பேசாதிருக்கையில் நான் பொறிந்தேன்,
நீண்ட கடு மிளகாயை ஒத்த உன் உதடுகள்,
அதை தோட்ட என் இதழ்களில் காரம், காமம் எல்லாம் சுவைத்தேன்,
பால் கொதிகலன் விசில் அடிப்பதை போல் நீ சிரிப்பது அழகு,
உன் வாய் மலர்கையில் அந்த ஜவ்வரிசி பற்கள் பேரழகு,
கொத்தமல்லியை நீரில் தோய்த்தெடுத்ததை போல நீள் கூந்தல்,
நெல்லியை கடித்தது போல் இருக்கிறது உன்னோடு வாழ்வது,
தள்ளி நின்று பானையில் நீ எரியும் இஞ்சி என் காயத்திற்கு பஞ்சு,
பொங்கும் சோறும், காலின் கொலுசும் “ஜல்” எனும் ஓசை எழுப்பும்,
கரண்டியின் நடனகானம் அந்த கை வளையல்,
விரித்த பச்சை வாழிலையில் அடுக்கிய பட்சணம் உன் லட்சணம்,
வில்லுடைத்து ஜானகியின் மனம் வெல்வான் அந்த ராமன்,
நெல் புடைத்து உன்னை காத்து கொள்வான் இந்த சாப்பாட்டு ராமன்.
#கவிப்போம்

Advertisements