வெளிய விரட்டு – Extended Version

 

வியக்கும் அளவிற்கு வீரம் போட்டு,
மக்கள் மனம் போல் திக்கெங்கும் பயிர் நட்டு,
கோவில் கோவும், நாட்டின் கோவும் ஒன்றே இங்கு,
இதற்கிடையே யாரடா நீ கோமாளி? விருந்துண்ண மட்டும தங்கு,
எங்கள் கலையின் அச்சாரம் கோ, எங்கள் கலாச்சாரம் கோ,
மஞ்சள் கொஞ்சும் நஞ்சை நிலத்தின் கோ எங்கள் மஞ்சு,
நீ யாரடா இங்கு? அயல் நாட்டு நஞ்சு,
மாடு முட்டி சாய்ந்தவரை விட நாடு வித்து மாய்ந்தவரே மிக,
தமிழ் உழவு கற்க கசடற, புகழ் உணர்ந்த பின் நிற்க அதற்கு தக,
உழுதல் பஞ்சாக பறக்கும் கடு நிலம்,
நாலு கால்கள் தொட்டதும் துளிர் விடும்,
கோவிர்கெல்லாம் கோ, காங்கேயம், அங்கேயும், இங்கேயும், எங்கேயும்,
ரயிலை போல் சீரும் காளையை அடக்கும் நாங்கள்,
அந்த சோம்பேறி சிங்கத்தையும் அனுப்புங்கள்,
அதையும் ஒரு கை பார்ப்போமே, தமிழன் அல்லவோ!
எங்கள் அரிசி பொங்கலை தின்று ஏப்பம் விட்டு,
உங்கள் ஜர்ஸீ ஆசையை எங்களிடம் திணிக்காதே,
பொங்கலும் பொங்கும், மக்களும் பொங்கும், தலையிட்டால்!
கொலை பாதகர்கள் விலை பேச ஒரு காலமும் வளையதே ,
ஊன் கன்று கொன்றால் கண்ணில் உன் சோர் தெரியாதே,
கோழிச்  சாற்றையும், ஆட்டுச்  சோற்றையும் உண்ட உனக்கு என்ன மானம்?
வானம் பார்த்து, பூமியுடன் பழகி, இயற்கையுடன் உறங்கி,
உழைத்து உண்ணும் எங்களின் மாக்கள் பாசம் அறிவாயோ?
அதெல்லாம் உணராத உன் பின்னே ஒரு மூடர் கூட்டம்,
ஒரு தமிழனை பிற மானுடர் மேல் ஏறி மிதிப்பதோ ,
பல நூற்றாயிரம் திமில் மேல் ஏறி தழுவிய நாங்கள் ,
எம் நில காளையை நிலையாய் ஏறு தழுவி பாருங்கள் ,
காளைகளை மாலை போட்டு தெய்வமென குறிக்கும் இடம் இது,
சீவிய கொம்பின் கூர்மையை தெம்பு கொண்ட கரங்கள் அடக்கும் ,
அது விளையாட்டு மட்டும் அல்ல , விளை நிலம் பாடும் பாட்டு ,
மீசையை முறுக்கி, வேட்டியை மடித்து, மஞ்சு விரட்டு,
பால் மனமும், மால் குணமும் கொண்டது எங்கள் ஜல்லிக்கட்டு.
– Me

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராசர்கள்
உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.
– பாரதிதாசன்

#HappyPongal

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s